10-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன செய்யலாம் ?
10-ஆம் வகுப்பிற்கு பிறகு சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று, உங்களுக்கான சிறப்பான ஆலோசனைகள் இதோ…!
10-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன செய்யலாம் ?
10-ஆம் வகுப்பு என்பது ஒவ்வொரு மாணவனும் தனது கல்வி ஓட்டத்தில் எட்டக்கூடிய முதல் மைல்கல்லாகும். ஆனால் அதன் பின்னர் அனைவருக்குள்ளும் பொதுவாக சில கேள்விகள் தோன்றும். குறிப்பாக 10-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன ?... 10-ஆம் வகுப்பிற்கு பிறகு எந்த பிரிவு சிறந்தது ?...11 மற்றும் 12-ஆம் வகுப்பில் எந்தெந்த பிரிவுகள் எல்லாம் உள்ளது ?... அவற்றுள் எந்த பிரிவுகள் எடுத்தால் நமக்கு உதவியாக இருக்கும் ?.. என்பது போன்ற கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்.
நீங்களும் இதுபோன்ற கேள்விகளில் சிக்கிகொண்டுள்ளீர்களா ..? கவலைபட வேண்டாம். நீங்கள் சரியான இடத்திற்குதான் வந்துள்ளீர்கள். உங்கள் எல்லாவிதமான கேள்விகளுக்கும் நாங்கள் பதில்களை கொண்டுவந்துள்ளோம்.
10-ஆம் வகுப்பிற்கு பிறகு தொழில் சார்ந்த ஆலோசனை ஏன் தேவைப்படுகிறது ?
வாழ்க்கையில் அடுத்த கட்ட தொழிலை தேர்ந்தெடுப்பது ஒரு சில மாணவர்களுக்கு மிகவும் எளிதான விஷயமாக இருக்கலாம் ஆனால் பலருக்கும் அப்படி அமைவதில்லை, குறிப்பாக சில உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படும். அவர்களை மனதில் வைத்து தான், நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளையும் ஆலோசனைகளையும் தருவதற்காக வந்திருக்கிறோம்.
எப்படி சரியான பாதையை தேர்ந்தெடுப்பது ?
சரி , 10-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன மாதிரியான வழிகள் எல்லாம் இருக்கிறது? என்று ஒரு கேள்வி எழுப்பினோமேயானால் அதற்கு பதிலாக பல்வேறு வழிகள் வந்து குவியும். ஆனால் எந்த துறையாக இருந்தாலும் அதனை சரியாக ஆராய்ந்து பார்க்காமல் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
எனவே எல்லோரும் தேர்ந்தெடுக்கும் பிரபலமான துறையை தேர்ந்தெடுக்காமல் எது சரியானதாக இருக்குமோ அதனை தேர்வு செய்தால் மட்டுமே நம்மால் சாதிக்கமுடியும். இந்த இடத்தில்தான் உங்களுக்கு சில உதவிகள் என்பது தேவைப்படும்.
எப்படி சரியான துறையை தேர்ந்தெடுப்பது ?
மாணவர்களில் அதிகமான நபர்கள் இந்த இடத்தில்தான் தவறு செய்கின்றார்கள். முக்கியமான நேரத்தில் பொறுமையா யோசித்து முடிவெடுக்காமல் அவசரத்தில் முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் வருந்துவதினால் எந்த பயனும் இல்லை.ஒவ்வொரு குழுவின் சமீபத்திய போக்குகள், எதிர்கால வாய்ப்புகள், பாடத்திட்டம் மற்றும் கல்வி முறைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும் விட ஒரு ஒரு மாணவனுக்கும் ஒரு ஒரு தனி திறமைகள் உள்ளது அதன் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் முடிவும், உங்கள் படிப்பும் தொழிலும் அமைந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
10-ஆம் வகுப்பிற்கு பிறகு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன
நாங்கள் முன்பு குறிப்பிட்டபடியே, 10-ஆம் வகுப்பிற்கு பிறகு பலவிதமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை துறை ரீதியாக பின்வரும் சிறிய கட்டுரையில் காண்போம்.
அறிவியல் பிரிவு
ஒருவேளை உங்களுக்கு அறிவியலில் மிகவும் ஆர்வம் இருக்குமேயானால் நீங்கள் பின்வரும் அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பது என்பது மிகவும் சிறந்தது,
இயற்பியல் சார்ந்த அறிவியல்: இயற்பியல், வேதியியல்
உயிரியல் சார்ந்த அறிவியல்: உயிரியல், உயிரி - தொழில்நுட்பம், வேளாண்மை, உணவு அறிவியல், விளையாட்டு, சுகாதார அறிவியல்.
கணிதம் சார்ந்த அறிவியல்: கணிதம் , புள்ளியியல்
சமூகம் சார்ந்த அறிவியல்: வரலாறு, பொருளாதாரம்
கணினி சார்ந்த அறிவியல்: கணிப்பொறியியல்
வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு
சிலருக்கு சிறுவயது முதலே வணிகம் மற்றும் தொழில் சார்ந்த சிந்தனைகள் இருந்துகொண்டே இருக்கும் அவர்களுடைய மனதும் அப்படியே சிந்தித்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பிரிவை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது
கணக்கியல்
வணிக ஆய்வுகள்
வர்த்தகம்
பொருளாதாரம்
பொருளாதார புவியியல்
தொழில்முனைவு
செயலக நடைமுறை
தொழிற்கல்வி
10-ஆம் வகுப்பிற்கு பிறகு பல்வேறு தொழில் படிப்புகளை 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் எடுத்து படிக்கலாம். நீங்கள் எந்த கல்வி முறையை தேர்தெடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து பாடங்கள் மாறும்.
கணக்கியல் & வரிவிதிப்பு
ஏர் கண்டிஷனிங் & குளிர்பதன
வாகன கடை பழுது மற்றும் பயிற்சி
வாகன வங்கி
வங்கி & காப்பீடு
அழகு மற்றும் ஆரோக்கியம்
வியாபார நிர்வாகம்
வணிக செயல்பாடுகள் & நிர்வாகம்
மூலதன சந்தை செயல்பாடுகள்
சிவில் இன்ஜினியரிங் டெக்னீஷியன்
மருத்துவ உயிர்வேதியியல் & நுண்ணுயிரியல்
கணினி கோட்பாடு மற்றும் கணினி ஆய்வாளர்
கட்டுமான தொழில்நுட்பம்
செலவு கணக்கியல் க்ரீச் மற்றும் முன்பள்ளி மேலாண்மை
தரவுத்தள மேலாண்மை பயன்பாடுகள்
வடிவமைப்பு மற்றும் புதுமை
மின்சார உபகரணங்கள்
மின் இயந்திரங்கள்
மின் தொழில்நுட்பம்
எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம்
சுற்றுச்சூழல் கல்வி
வெளிப்புற மற்றும் உள்துறை வடிவமைப்பு
நிதி கணக்கியல்
நிதி சந்தை மேலாண்மை
உணவு மற்றும் பான சேவைகள்
உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
உணவு உற்பத்தி
முன் அலுவலக செயல்பாடுகள்
ஆடை கட்டுமானம்
புவிசார் தொழில்நுட்பம்
கிராஃபிக் டிசைன் டெக்னீஷியன்
உடல்நலம் மற்றும் அழகு ஆய்வுகள்
சுகாதார அறிவியல்
தோட்டக்கலை
விருந்தோம்பல் மேலாண்மை
தகவல் தொழில்நுட்ப காப்பீடு
IT விண்ணப்பம்
நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகள் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத்திறன்
வெகுஜன ஊடக ஆய்வுகள் மற்றும் தயாரிப்பு
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டெக்னீஷியன்
மருத்துவ நோயறிதல்
இசை தயாரிப்பு
அலுவலக நடைமுறைகள் மற்றும் பயிற்சி
அலுவலக செயலாளர் பதவி
ஆஃப்செட் பிரிண்டிங் டெக்னீஷியன்
தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு
சில்லறை விற்பனை நடவடிக்கைகள்
விற்பனைத் திறன்
பாதுகாப்பு
ஸ்டெனோகிராபி மற்றும் கணினி பயன்பாடு
வரிவிதிப்பு
தொலைத்தொடர்பு & எலக்ட்ரானிக் டெக்னீஷியன்
ஜவுளி வடிவமைப்பு
போக்குவரத்து அமைப்புகள் மற்றும் தளவாட மேலாண்மை
சுற்றுலா மற்றும் சுற்றுலா
மின்னணு உபகரணங்களை சரிசெய்தல் மற்றும் பராமரித்தல்
அச்சுக்கலை மற்றும் கணினி பயன்பாடு
இணைய பயன்பாடுகள்
எக்ஸ்ரே டெக்னீஷியன்
பாலிடெக்னிக் டிப்ளமோ பிரிவு
பாலிடெக்னிக் படிப்புக்கு பிறகு நீங்கள் வேலைக்கும் செல்லலாம் அதுமட்டுமின்றி பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாமாண்டு சேர்ந்தும் படிக்கலாம். இதுபோன்ற பாலிடெக்னிக் பிரிவுகளுக்கு நுழைவுத்தேர்வுகளும் நடத்தபடுகின்றது, அதன் மூலமாக நீங்கள் நல்ல கல்லூரியில் பின்வரும் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
கணினி பொறியியல்
சைபர் தடயவியல் & தகவல் பாதுகாப்பு
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்
பயன்பாட்டு மின்னணுவியல் மற்றும் கருவிகள்
எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
மின்னணுவியல்
பயோமெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
தகவல் தொழில்நுட்பம்
இயந்திர பொறியியல்
மருத்துவ மின்னணுவியல்
CAD-CAM
3-டி அனிமேஷன் & கிராபிக்ஸ்
ஆடை வடிவமைப்பு & ஃபேஷன் தொழில்நுட்பம்
இரசாயன தொழில்நுட்பம்
சிவில் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங் (சுற்றுச்சூழல்)
உணவு பதப்படுத்தும்முறை
நீர் தொழில்நுட்பம்
மெகாட்ரானிக்ஸ்
பவர் எலக்ட்ரானிக்ஸ்
ITI சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள்:
நீங்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் மிகவும் கைத்தேர்ந்தவராக இருந்தால், பின்வரும் ITI சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து படித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் (2 years duration).
கணினி வன்பொருள் & நெட்வொர்க் பராமரிப்பு
வரைவாளர் (சிவில்)
எலக்ட்ரீஷியன்
எலக்ட்ரானிக் மெக்கானிக்
மெக்கானிக் (குளிர்சாதனம் மற்றும் ஏர் கண்டிஷனர்)
மெக்கானிக் (ஆட்டோ எலக்ட்ரிக்கல்ஸ் & எலக்ட்ரானிக்ஸ்)
மெக்கானிக் (மெகாட்ரானிக்ஸ்)
மெக்கானிக் (மருத்துவ மின்னணுவியல்)
நிலமளப்போர்
கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்
ITI சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் சாரா படிப்புகள்:
நீங்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் மிகவும் கைத்தேர்ந்தவராக இல்லாவிட்டால், பின்வரும் ITI சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் சாரா படிப்புகள் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து படித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் (1-2 years duration)
பேக்கர் & மிட்டாய் தயாரிப்பாளர்
கணினி ஆபரேட்டர் & நிரலாக்க உதவியாளர்
உணவு மற்றும் பான சேவைகள்
உணவு உற்பத்தி
முடி மற்றும் தோல் பராமரிப்பு
வீட்டு வேலை செய்பவர்
மல்டிமீடியா, அனிமேஷன், சிறப்பு விளைவுகள்
பயண சுற்றுலா உதவியாளர்
பிளம்பர்
வெல்டர்
முதியோர் பராமரிப்பு
ஸ்பா சிகிச்சை
தொழிற்பயிற்சியில் உள்ள டிப்ளமோ படிப்புகள்
நீங்கள் NSQF (National Skill Qualification Framework) பயிற்சி திட்டத்தின் கீழ் பின்வரும் படிப்புகளில் 3 வருட D.Vocஐ தேர்வு செய்து படிக்கலாம்.
மென்பொருள் மேம்பாடு
கிராபிக்ஸ் & மல்டிமீடியா
பயணம் & சுற்றுலா
குளிரூட்டல் & ஏர் கண்டிஷனிங்
BFSI
மருத்துவ சிந்தனை
திறன் பயிற்சி திட்டங்கள்
அதேபோல் NSDC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் சேர்ந்து பின்வரும் திறன் பயிற்சி திட்டங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்
அனிமேட்டர்
அழகு சிகிச்சை வல்லுநர்
உணவு பதப்படுத்தும்முறை
ஜெம்ஸ் & நகைகள்
சுகாதாரம்
மொபைல் போன் டெக்னீஷியன்
ஆர்கானிக் விவசாயி
விற்பனை நிர்வாகி
மென்பொருள் மேம்பாடு
சூரிய ஒளிமின்னழுத்த அமைப்பு நிறுவி
இறுதியாக…
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்க்கைப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக 10 ஆம் வகுப்புக்குப் பிறகு, எனவே நன்கு யோசித்து புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கவும். மேலும் இதுபோன்ற தகவல்களுக்கும் தொழில் வழிகாட்டுதலுக்கும் Hashnode -ல் எங்களை பின்தொடர்வதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். எதிர்காலம் சிறப்பாக அமைய எங்களின் வாழ்த்துக்கள்.